மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி


மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி
x

மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியானார்

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள தென்பெரம்பூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகமாயி (வயது 60). இவர், திருக்காட்டுப்பள்ளிக்கு வந்துவிட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரி எதிரே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில், பலத்த காயமடைந்த மகமாயி தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த விஷ்ணம்பேட்டை கண்ணன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






Next Story