வில்லுக்குறி அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை


வில்லுக்குறி அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
x

வில்லுக்குறி அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

வில்லுக்குறி அருகே பந்தப்பணவிளையை சேர்ந்தவர் சுப்பையா (வயது 72). இவருடைய மனைவி லதாதேவி (65).

நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த லதாதேவி திடீரென வீட்டில் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த இரணியல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

--


Next Story