சர்வீஸ் சாலையை சீரமைக்க கோரி சாலையில் படுத்து முதியவர்கள் நூதன போராட்டம்


சர்வீஸ் சாலையை சீரமைக்க கோரி சாலையில் படுத்து முதியவர்கள் நூதன போராட்டம்
x

குரோம்பேட்டை சர்வீஸ் சாலையை சீரமைக்க கோரி சாலையில் படுத்து முதியவர்கள் நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சென்னை

சென்னையை அடுத்த குரோம்பேட்டை எம்.ஐ.டி. மேம்பாலத்தில், நியுகாலனியை ஒட்டிய சர்வீஸ் சாலை உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையில் அடிக்கடி பள்ளம் தோண்டுவதும், அதை முறையாக மூடாததும் தொடர்கிறது. பாதாள சாக்கடை குழாய் பதிக்க தோண்டிய பள்ளம் சரியாக மூடப்படாமல் குண்டும், குழியுமாக காணப்படுவதால் வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து விபத்துகளில் சிக்குகின்றனர்.

இதுகுறித்து பல முறை புகார் தெரிவித்தும், சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறை, மாநகராட்சி உள்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் குண்டும், குழியுமான இந்த சர்வீஸ் சாலையை சீரமைக்காத அதிகாரிகளை கண்டித்து, குரோம்பேட்டையை சேர்ந்த முதியவர்கள் நேற்று காலை சர்வீஸ் சாலையில் படுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். வரி வசூல் செய்யும் மாநகராட்சி, மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகின்ற சாலை பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர்.


Next Story