பழைய நீடாமங்கலம் பத்ரகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா


பழைய நீடாமங்கலம் பத்ரகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா
x

பழைய நீடாமங்கலம் பத்ரகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வழிபாடு

திருவாரூர்

நீடாமங்கலம்:

பழைய நீடாமங்கலம் பத்ரகாளியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி தொடங்கியது. விழாவையொட்டி நீடாமங்கலம் அய்யனார் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பழைய நீடாமங்கலம் பத்ரகாளியம்மன் கோவிலை வந்தடைந்தனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் காவடி எடுத்தனர். இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது. நீடாமங்கலம் அய்யனார் கோவிலிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அய்யனார், அங்காளம்மன், வீரன், பேச்சியாயி, குழுந்தாளம்மன் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு ஆராதனை நடந்தது. மாலையில் பக்தர்கள் அய்யனார் கோவிலில் உருவபொம்மைகள் வைத்து வேண்டுதல் நடத்தினர். இரவு பத்ரகாளியம்மன் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம தலைவர் பரமசிவம், செயலாளர் சுசீந்திரன் மற்றும் பலர் செய்திருந்தனர். வருகிற 5-ந்தேதியுடன் விழா நிறைவடைகிறது.


Next Story