நெல்லிக்குப்பம் ரெயில் நிலையத்தில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த முதியவர் - போலீசார் விசாரணை


நெல்லிக்குப்பம் ரெயில் நிலையத்தில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த முதியவர் - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 4 Jun 2023 12:15 AM IST (Updated: 4 Jun 2023 7:04 AM IST)
t-max-icont-min-icon

நெல்லிக்குப்பம் ரெயில் நிலையத்தில் ரத்தகாயங்களுடன் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலூர்


நெல்லிக்குப்பம்,

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் ரெயில் நிலையத்தில் நேற்று காலை 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதை பார்த்த ரெயில் நிலையத்திற்கு வந்த பயணிகள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கடலூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நெல்லிக்குப்பம் ரெயில் நிலைய பகுதியிலேயே கடந்த சில மாதங்களாக தங்கியிருந்த அந்த முதியவர், இருக்கையில் படுத்து தூங்கிய போது கீழே தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்பது தெரியவந்தது. ஆனால் அவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இதையடுத்து போலீசார், முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணை

தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த முதியவர் யார்?, இருக்கையில் இருந்து தவறி விழுந்து தான் இறந்தாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story