மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு
புதுக்கடை:
புதுக்கடை அருகே உள்ள ஐரேனிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜமணி(வயது 84). திருமணம் ஆகாத இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாலையில் அந்த பகுதியில் உள்ள சானல் முக்கு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சடையன்குழி பகுதியை சேர்ந்த கவிராஜ்(52) என்பவர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார். அவருடன் பாலோடு பகுதியைச் சேர்ந்த ஞானசிகாமணி(43) என்பவர் பின்னால் அமர்ந்திருந்தார். எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் கவிராஜ் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ராஜாமணிைய அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே ராஜாமணி பரிதாபமாக இறந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கவிராஜ், உடன் வந்த ஞானசிகாமணி ஆகியோரும் படுகாயமடைந்தனர். அவர்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை இன்ஸ்பெக்டர் ஜேசு ராஜசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.