முதியவர் விஷம் குடித்து தற்கொலை
முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தக்கலை:
தக்கலை அருகே உள்ள கோழிப்போர்விளை, கொட்டாரவிளையை சேர்ந்தவர் சின்னையன் (வயது 70). இவருக்கு மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். பிள்ளைகளுக்கு திருமணமாகி விட்டது. சின்னையன் மனைவியுடன், மகன் ரொனால்ட் சிபின் (30) வீட்டில் வசித்து வந்தார். சின்னையன் கடன்பெற்று பசுமாடு ஒன்று வாங்கி உள்ளார்.
இந்த நிலையில் பசுமாடு நோய் தாக்கி இறந்ததால் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்தார். இதனால், மனமுடைந்த சின்னையன், சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த மனைவி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக அழகியமண்டபத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சின்னையன் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தக்கலை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சின்னையனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர், மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.