ஆசாரிபள்ளத்தில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
ஆசாரிபள்ளத்தில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
கன்னியாகுமரி
நாகர்கோவில், பிப்.28-
நாகர்கோவில் பெருவிளை சாமி தெருவை சேர்ந்தவர் நாடார் தாசன் பாய் (வயது 73). இவருடைய மனைவி சாந்தி. நாடார் தாசன் பாய் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி ஆசாரிபள்ளம் போலீசில் சாந்தி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நாடார் தாசன் பாய்க்கு தோல் சம்பந்தமான நோய் இருந்து வந்தது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் குணமாகவில்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்த அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
Related Tags :
Next Story