தைலக்காப்பு சாற்றும் நிகழ்ச்சி
கீழ்வேளூர் அட்சயலிங்க சாமி கோவிலில் அஞ்சுவட்டத்தம்மனுக்கு தைலக்காப்பு சாற்றும் நிகழ்ச்சி நடந்தது.
நாகப்பட்டினம்
கீழ்வேளூரில் அட்சயலிங்கசாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அஞ்சுவட்டத்தம்மன் அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் அஞ்சு வட்டத்தம்மனுக்கு 48 வகை மூலிகைகள் அடங்கிய தைலக்காப்பு சாற்றும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்றுமுன்தினம் யாகசாலையில் பூஜிக்கப்பட்ட தைலம் கோவில் உள் பிரகாரங்கள் வழியாக புறப்பாடு நடைபெற்றது. பின்னர் அஞ்சுவட்டத்தம்மனுக்கு தைலக்காப்பு சாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கோவில் செயல் அலுவலர் பூமிநாதன் மற்றும் கோவில் பணியாளர்கள், உபயதார்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story