Normal
ஜல்லி கம்பெனியில் ஆயில் பேரல்கள் தீயில் எரிந்து நாசம்

வேலூர் அருகேஜல்லி கம்பெனியில் ஆயில் பேரல்கள் தீயில் எரிந்து நாசம் ஆனது.
வேலூர்
வேலூர்
வேலூர் அருகே காட்டுப்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாபு. இவர் பாகாயம் அருகே துத்திப்பட்டு ரெயில்வே கேட் அருகே ஜல்லிக்கற்கள் தயார் செய்யும் கம்பெனி வைத்துள்ளார். இங்கு ஆயில் பேரல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் திடீரென ஆயில் பேரல்களில் தீ பற்றிக்கொண்டது. தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர். எனினும் அவர்களால் முடியவில்லை.
இதுகுறித்து வேலூர் தீயணைப்பு நிலைத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். சுமார் 20 பேரல்களில் இருந்த ஆயில் தீப்பிடித்து எரிந்து நாசமானதாகவும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story