லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடந்தால் தான் அதிகாரிகளுக்கு பயம் இருக்கும் - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேட்டி
லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடந்தால் தான் அதிகாரிகளுக்கு பயம் இருக்கும் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
கொரோனா பெருந்தொற்று காலத்தில் ரெயில்வே மேம்பால பணிகள் பாதிக்கப்பட்டது. தற்போது பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகள், பாதாள சாக்கடை திட்ட பணிகள் 90 விழுக்காடுக்கு மேல் நிறைவு பெற்றுள்ளதால் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.
லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்றால் தான் அதிகாரிகளுக்கு பயம் இருக்கும். பொதுமக்களை அலைக்கழிக்க கூடாது என்பதுதான் முதலமைச்சரின் எண்ணம். மக்களிடம் லஞ்சம் பெற வேண்டும் என்பதற்காகவே அதிகாரிகள் அவர்களை அலைக்கழிக்கின்றனர். எனவே லஞ்சத்தை ஒழிக்க வேண்டும். வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான முடிவுகளை முதல்-அமைச்சர் எடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story