தடுப்பணையை சீரமைப்பதற்காக ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் ஆய்வு


தடுப்பணையை சீரமைப்பதற்காக ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் ஆய்வு
x

தடுப்பணையை சீரமைப்பதற்காக ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருவண்ணாமலை

வந்தவாசி

தடுப்பணையை சீரமைப்பதற்காக ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

வந்தவாசியை அடுத்த மேல்பாதி கிராமத்தில் தொடங்கும் சுகநதியானது வல்லம், ஆனைபோகி, எறும்பூர், ஆராசூர், மாம்பட்டு, வந்தவாசி, பிருதூர், வழூர், கீழ்பாக்கம், உளுந்தை வழியாக செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஏரியில் சென்று கலக்கிறது.

இந்த நதியானது வந்தவாசி நகரை ஒட்டியவாறு சென்று செம்பூர் கிராமத்தில் இருந்து மருதாடு ஏரி, பிருதூர் ஆற்றுப்பகுதிக்கு செல்கிறது. வந்தவாசி நகரில் உள்ள ஐந்து கண் பாலம் அருகே சென்னாவரம், பிருதூர், மங்கநல்லூர் பெரிய ஏரி, சித்தேரிகளுக்கு செல்லும் வகையில் சிறிய தடுப்பணை ஏற்படுத் தப்பட்டுள்ளது. இந்த தடுப்பணை தற்போது சிதிலடைந்துள்ளதால் எள்ளுபாறை பகுதியில் ரூ.73.30 கோடியில் தடுப்பணை ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி சுகநதி கரையில் உள்ளவர்களை அப்புறப்படுத்த எச்சரிக்கை நோட்டீசு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் தினேஷ்குமார் தலைமையில் வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், கிராம அலுவலர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலையில் வான்வெளி இணைய சேவை மூலமாக இடத்தை அளவீடு செய்யும் பணியை எள்ளுபாறை பகுதியில் அளவீடு செய்தனர்.

இதில் கண்டறியப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகு தடுப்பணை கட்டும்பணி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story