பாபநாசம் வனப்பகுதியில் மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க அதிகாரிகள் ஆய்வு
![பாபநாசம் வனப்பகுதியில் மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க அதிகாரிகள் ஆய்வு பாபநாசம் வனப்பகுதியில் மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க அதிகாரிகள் ஆய்வு](https://media.dailythanthi.com/h-upload/2023/04/08/1226845-vkm-eb-1.webp)
பாபநாசம் வனப்பகுதியில் மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
பாபநாசம் வனப்பகுதியில் மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
வனவிலங்குகளை காக்க...
வனப்பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள மின்கம்பிகளுக்கு கீழே செல்லும்போது விபத்து ஏற்படாமல் வனவிலங்குகளை பாதுகாக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் உத்தரவிட்டனர்.
இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் மின்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதி பாதுகாப்பு தொடர்பான சிறப்பு ஆய்வு கூட்டம் நெல்லையில் நடைபெற்றது. மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தின் முடிவில் வனவிலங்குகள் செல்லும் பகுதிகளில் தேவையான இடங்களில் மின்பாதைகளின் உயரத்தை அதிகரிப்பதற்கு வன அலுவலர்களுடன் இணைந்து மின்பாதைகளை ஆய்வு செய்து தேவையான இடங்களில் உயரத்தை உடனடியாக அதிகரிக்க உத்தரவிடப்பட்டது.
அதிகாரிகள் ஆய்வு
அதன்படி மேற்கு தொடர்ச்சி மலை பாபநாசம் அகஸ்தியர் அருவி, பாபநாசம் கீழ் முகாம் (லோயர் கேம்ப்), முண்டந்துறை ஆகிய பகுதிகளில் பாபநாசம் கீழ் முகாம் பிரிவு இளநிலை மின் பொறியாளர் விஜயராஜ் மற்றும் மின் பணியாளர்கள், வனத்துறை சார்பில் பாபநாசம் வனச்சரக வனவர் ஜெகன், வேட்டை தடுப்பு காவலர்கள் நாகராஜன், பாலகிருஷ்ணன் ஆகியோர் நேற்று முதற்கட்ட கள ஆய்வு செய்தனர்.