ஆலங்குளத்தில் காமராஜர் சிலையை அதிகாரிகள் ஆய்வு
ஆலங்குளத்தில் காமராஜர் சிலையை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தென்காசி
ஆலங்குளம்:
நெல்லை-தென்காசி 4 வழிச்சாலை பணிகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக ஆலங்குளம் பஸ் நிலையம் அருகில் சாலையோரம் இருந்த காமராஜர் சிலையை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனையறிந்த அப்பகுதி பொதுமக்கள் காமராஜர் சிலையை வேறொரு இடத்தில் நிறுவ வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக புதிய பஸ் நிலையம் அருகிலேயே காமராஜர் சிலை நிறுவ இடம் ஒதுக்கப்பட்டு அதற்கான வேலை பொதுமக்கள் சார்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பழைய காமராஜர் சிலையை உதவி கலெக்டர் கங்காதேவி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், ஆலங்குளம் தாசில்தார் கிருஷ்ணவேல், பொதுப்பணித்துறை பொறியாளர்கள், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story