ஒகேனக்கல் மீன் விற்பனைக் கூடங்களில் அதிகாரிகள் ஆய்வு: 195 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்
ஒகேனக்கல் மீன் விற்பனைக் கூடங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் உள்ள மீன் விற்பனைக் கூடங்களில் அழுகிய நிலையில் உள்ள மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் இணைந்து ஒகேனக்கல் மீன் விற்பனைக் கூடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அங்குள்ள சுமார் 30-க்கும் மேற்பட்ட கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 5 கடைகளில் இருந்து தரமற்ற நிலையில் சுமார் 195 கிலோ அளவிலான மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு வனப்பகுதியில் குழி தோண்டி கொட்டி அழிக்கப்பட்டன.
Related Tags :
Next Story