குலசேகரன்பட்டினத்தில் அதிகாரிகள் ஆய்வு


குலசேகரன்பட்டினத்தில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 10 Sept 2023 12:15 AM IST (Updated: 10 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற அக்டோபர் மாதம் 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், கழிப்பறை வசதிகள், வாகன நிறுத்தம் குறித்து தூத்துக்குடி மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை தக்காரும், உதவி ஆணையருமான சங்கர் தலைமையில் ஆய்வு பணி நடைபெற்றது. இதில் பக்தர்கள் தங்குவதற்கு கடற்கரை மற்றும் புதுத்தெரு பைபாஸ் பகுதியில் பக்தர்கள் ஓய்வுக்கூடம் அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் குலசேகரன்பட்டினம் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவில் பகுதியில் 10 ஏக்கர் நிலத்தில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்களை நிறுத்தம் செய்வதற்கு ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் போது கோவில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன், கோவில் ஆய்வாளர் பகவதி, கோவில் கணக்கர் டிமிட்ரோ மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.


Next Story