நாகர்கோவிலில் ஆட்சிமொழி பயிலரங்கம்


நாகர்கோவிலில் ஆட்சிமொழி பயிலரங்கம்
x
தினத்தந்தி 7 Feb 2023 6:45 PM GMT (Updated: 7 Feb 2023 6:46 PM GMT)

நாகர்கோவிலில் ஆட்சிமொழி பயிலரங்கம்தொடங்கியது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 2 நாள் ஆட்சிமொழி பயிலரங்கம் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கியது. நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். குமரி மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் கனகலட்சுமி வரவேற்று பேசினார். பின்னர் பல்வேறு அமர்வுகளில் பயிலரங்கம் நடந்தது. ஆட்சிமொழி வரலாறும், சட்டமும் என்ற தலைப்பில் திருநெல்வேலி முதுகலைத் தமிழாசிரியர் சரவணகுமாரும், ஆட்சிமொழி அரசாணைகளும், செயலாக்கமும் என்ற தலைப்பில் உதவி இயக்குனர் கனகலட்சுமியும், தமிழில் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள், அணியமாக்கல் என்ற தலைப்பில் திருவாரூர் முதுகலை தமிழாசிரியர் ராசகணேசனும் உரையாற்றினர். பயிலரங்க நிறைவு விழா இன்று (புதன்கிழமை) மாலையில் நடக்கிறது. விழாவில் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கலந்து கொள்கிறார்.


Next Story