தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மின் இணைப்புகள் குறித்து அதிகாரி ஆய்வு


தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மின் இணைப்புகள் குறித்து அதிகாரி ஆய்வு
x

தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மின் இணைப்புகள் குறித்து அதிகாரி ஆய்வு செய்தார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மின் பகிர்மான வட்டத்தில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின் இணைப்புகள், தொழிற்சாலைகளுக்கான மின் இணைப்புகள் உள்பட அனைத்து விதமான மின் இணைப்புகள் வழங்குவது குறித்து ஆய்வுக்கூட்டம் பெரம்பலூர் மின் பகிர்மான அலுவலகத்தில் நடந்தது. இதில் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் செடிஅழகன் கலந்து கொண்டு அலுவலர்களுடன் கலந்தாலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து பெரம்பலூர் மற்றும் சிறுவாச்சூர் பகுதியில் உயர் அழுத்த மற்றும் தாழ்வு அழுத்த மின்பாதைகளில் கனரக எந்திரங்களை கொண்டு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை செடிஅழகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் பேரளியில் உள்ள துணை மின் நிலையத்தில் புதிய மின்மாற்றியை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். அப்போது பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அம்பிகா, மின் அளவு சோதனை பிரிவு செயற்பொறியாளர் மேகலா, பெரம்பலூர் மின்கோட்ட செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன், உதவி செயற்பொறியாளர்கள் சுரேஷ்குமார், ரஞ்சித்குமார், செல்வராஜ் மற்றும் களப்பணியாளர்கள் உடனிருந்தனர்.


Next Story