மண்டைக்காட்டில் சுகாதாரமற்ற உணவு பொருட்களை கைப்பற்றி அழித்த அதிகாரிகள்


மண்டைக்காட்டில் சுகாதாரமற்ற உணவு பொருட்களை கைப்பற்றி அழித்த அதிகாரிகள்
x

மண்டைக்காட்டில் சுகாதாரமற்ற உணவு பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றி அழித் தனர்.

கன்னியாகுமரி

மணவாளக்குறிச்சி:

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசித்திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி கோவிலை சுற்றி இனிப்பு மற்றும் பலகாரக்கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் குழு இனிப்பு மற்றும் பலகார கடைகளில் தொடர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் குளச்சல் நகராட்சி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ரவி, அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் தங்கசிவம் ஆகியோர் ஈடுபட்டனர். இந்த சோதனையில் அதிகமான கலர் சேர்க்கப்பட்ட 5 கிலோ காலிபிளவர் பக்கோடா, உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆகியவைகளை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர். மேலும் சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்களை வைத்திருந்த 5 கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.


Next Story