பன்றிகளை பிடிக்க நடவடிக்கை


பன்றிகளை பிடிக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 30 Oct 2022 1:00 AM IST (Updated: 30 Oct 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பன்றிகளின் உரிமையாளர்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி பன்றிகளை அப்புறப்படுத்த அறிவுறுத்தியது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டமும் நடந்தது. இந்த நிலையில் நேற்று பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித் உத்தரவின் பேரில் துப்புரவு ஆய்வாளர் சுப்பிரமணியன், துப்புரவு மேற்பார்வையாளர் சம்பந்தமூர்த்தி மற்றும் போலீசார் குத்தாலம் பேரூராட்சி குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த பன்றிகளை பணியாளர்கள் மூலம் பிடித்து அப்புறப்படுத்தினர்.


Next Story