நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை - வேளாண்மை உதவி இயக்குனர் எச்சரிக்கை

நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை - வேளாண்மை உதவி இயக்குனர் எச்சரிக்கை
x

மயிலாடுதுறை பகுதியில் நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என மயிலாடுதுறை வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை பகுதியில் நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என மயிலாடுதுறை வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நடவடிக்கை

மயிலாடுதுறை வட்டாரத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் வினியோகம் செய்யப்படுகின்ற உரங்களுக்கு முறையான அரசு உரிமம் இல்லாமலோ அல்லது அரசு நிர்ணையித்த விலையை விட கூடுதல் விலைக்கோ உரங்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு விற்பனை இடங்களிலும் முறையான விலைப்பட்டியல் பொதுமக்களுக்கு தெரியும் வண்ணம் வைக்காவிட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

உர விற்பனைக்கு ரசீதுகள் வழங்கப்படாமல் இருந்தாலோ, முறையான உரங்கள் வரவு- செலவு பதிவேடுகள் பராமரிக்கப்படாமல் இருந்தாலோ உரக்கட்டுப்பாட்டு ஆணை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.

கண்காணிப்பு

மேலும் மயிலாடுதுறை வட்டார அளவில் உரக்கட்டுப்பாட்டு ஆய்வாளர் வசந்தகுமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டு வட்டாரம் முழுவதும் கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது. மேற்படி கூறிய விதிமீறல்கள் ஏதும் இருப்பின் மயிலாடுதுறை வட்டார உரக்கட்டுப்பாட்டு ஆய்வாளருக்கு 9344859305 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story