வழக்குகளை நடத்த முடியாத ஏழை எளியோருக்கு உதவ சட்ட உதவி முறைமை அலுவலகம் தர்மபுரி நீதிமன்ற வளாகத்தில் தொடக்கம்


வழக்குகளை நடத்த முடியாத ஏழை எளியோருக்கு உதவ சட்ட உதவி முறைமை அலுவலகம் தர்மபுரி நீதிமன்ற வளாகத்தில் தொடக்கம்
x
தினத்தந்தி 20 Jun 2023 1:00 AM IST (Updated: 20 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

வழக்குகளை நடத்த முடியாத ஏழை எளியோருக்கு உதவ தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்ட உதவி எதிர்காப்பு முறைமை அலுவலகம் நேற்று தொடங்கப்பட்டது.

சட்ட உதவி அலுவலகம்

தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்ட உதவி எதிர்காப்பு முறைமை அலுவலக தொடக்க விழா நேற்று நடைபெற்றது. சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வலா காணொளி காட்சி மூலம் சட்ட உதவி எதிர்பார்ப்பு முறைமை அலுவலகத்தை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து தர்மபுரி மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி சட்ட உதவி எதிர்பார்ப்பு முறைமை அலுவலகத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.சட்ட உதவி எதிர்பார்ப்பு முறைமை அலுவலகத்தில் முதன்மை சட்ட உதவி வக்கீலாக செந்தாமரை, துணை சட்ட உதவி வக்கீல்களாக பாலு, பார்த்திபன், உதவி வக்கீல்களாக தமிழமுதன், சுபாஸ்ரீ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட்டனர்.

முக்கிய நோக்கம்

இந்த சட்ட உதவி எதிர்பார்ப்பு முறைமை அலுவலகம், வழக்கு நடத்த வசதி இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக வழக்குகளை விரைந்து நடத்த நடவடிக்கை மேற்கொள்ளும். இதேபோல் சிறைச்சாலையில் உள்ள வசதி இல்லாத சிறைவாசிகளை ஜாமீனில் எடுத்தல், குற்றவியல் வழக்குகளை நடத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்வதை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படும். இந்த விழாவில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ராஜா, விரைவு மகளிர் நீதிபதி சையத் பர்கத்துல்லா, கூடுதல் மாவட்ட நீதிபதி மோனிகா, குடும்ப நல நீதிபதி விஜயகுமாரி மற்றும் நீதிபதிகள், வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story