பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டு அவமானப்படுத்தப்பட்டார் - மருது அழகுராஜ் பேட்டி


பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டு அவமானப்படுத்தப்பட்டார் - மருது அழகுராஜ் பேட்டி
x

இரட்டை தலைமை அதிமுக தொண்டர்களால் ஏற்கப்பட்டது என்று அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க.வை வழிநடத்த ஒற்றை தலைமையா? இரட்டை தலைமையா? என்ற விவாதம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இது தொடர்பாக கடந்த 23-ந் தேதி பொதுக்குழு கூட்டம் களேபரமாக நடந்து முடிந்தது. தற்போது இரு அணிகளாக கட்சி செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம், ஒற்றை தலைமை குறித்து அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

அதிமுகவில் இரட்டை தலைமை மக்களால் ஏற்கப்பட்டது. யாருடைய சுயநலம் அதிமுகவின் பிளவுக்கு காரணம் என்பது அனைவருக்கு தெரியும். 2 பேரும் ஒற்றுமையாக கட்சியை கொண்டு சென்றிருந்தால், அதிக வெற்றி பெற்றிருக்க முடியும்.

திட்டமிட்டு திரைக்கதை எழுதியது போல அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் அவமதிக்கப்பட்டார். ஆனால், அண்ணன் எடப்பாடி பழனிசாமி அதனை கண்டிக்கவில்லை, வருத்தம் தெரிவிக்கவில்லை.

அதிமுகவை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டுமென திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது இந்த பொதுக்குழு; ஜனநாயகத்திற்கு மாறாக, ஒரு நில அபகரிப்பு நடப்பது போல அதிமுகவில் அரசியல் அபகரிப்பு நடக்கிறது.

நிர்வாகிகளுக்கு பின்னால் இருந்த சிலர், ஓ.பன்னீர்செல்வத்தை நாகூசம் வார்த்தைகளால் திட்டித் தீர்த்தனர். பொதுக்குழுவில் எங்கு பார்த்தாலும் அடியாட்கள் மயமாக இருந்தது. அதிமுக பொதுக்குழுவில் ஏதோ நோக்கத்தோடு அடியாட்கள் திரட்டப்பட்டிருந்தனர். அதிமுகவின் தலைமையை தொண்டர்கள்தான் தேர்வு செய்ய வேண்டுமே தவிர நிர்வாகிகள் அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story