காலை சிற்றுண்டி திட்டத்தை வழங்க வலியுறுத்திசத்துணவு ஊழியர்கள் மடியேந்தி போராட்டம்


காலை சிற்றுண்டி திட்டத்தை வழங்க வலியுறுத்திசத்துணவு ஊழியர்கள் மடியேந்தி போராட்டம்
x
தினத்தந்தி 31 Aug 2023 12:15 AM IST (Updated: 31 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் மடியேந்தி போராட்டம் நடத்தினர்.

விழுப்புரம்

மடியேந்தி போராட்டம்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் நேற்று மாலை விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் மடியேந்தி போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் கிருபாகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் துரை, காசி, ரீட்டாமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் வீமன் வரவேற்றார். இந்திய தொழிற்சங்க மைய மாவட்ட செயலாளர் மூர்த்தி தொடக்க உரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சரவணன் வாழ்த்துரை வழங்கினார். மாநில தணிக்கையாளர் தேசிங்கு கோரிக்கை விளக்கவுரையாற்றினார். மாநில துணைத்தலைவர் ஜெயந்தி நிறைவுரையாற்றினார்.

கோரிக்கைகள்

தமிழக முதல்-அமைச்சரின் தேர்தல்கால வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் ஒப்படைக்கக்கோரியும், ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.9 ஆயிரம் வழங்கக்கோரியும், காலிப்பணியிடத்தை நிரப்ப வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடந்தது.

இதில் மாவட்ட இணை செயலாளர்கள் மோகனா, வெண்மதி, உமா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் புனிதா, ஜானகிதேவி உள்பட பலர் கலந்துகொண்டு மடியேந்தியவாறு போராட்டம் செய்தனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சத்யா நன்றி கூறினார்.


Next Story