ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி; அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்


ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி; அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 10 Sept 2023 12:15 AM IST (Updated: 10 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ஊட்டச்சத்து குறித்து நேற்று நடந்த விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஊட்டச்சத்து குறித்து நேற்று நடந்த விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு பேரணி

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

அதன்படி, "ஊட்டச்சத்துமிக்க இந்தியா, எழுத்தறிவு பெற்ற இந்தியா, வலிமையான இந்தியா" என்பதை வலியுறுத்தி தூத்துக்குடி எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு நேற்று அங்கன்வாடி பணியாளர்கள், அலுவலர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது.

அமைச்சர் தொடங்கி வைத்தார்

இந்த பேரணியை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று, தூத்துக்குடி தாலுகா அலுவலகம் முன்பு நிறைவடைந்தது.

நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் சரஸ்வதி, மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) ரூபி பெர்னாண்டோ, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விவேக் ராஜா, திட்ட உதவியாளர் ஜெனிபா கிறிஸ்டி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட வட்டார அலுவலர்கள் ஜெயாதுரை பாண்டியன், தாஜீன்னிஷா பேகம், காயத்ரி, திலகா, சண்முகப்பிரியா, புள்ளியியல் ஆய்வாளர் முத்தரசி, சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள் பொற்செல்வன், ஜெகவீரபாண்டியன், சுகாதார துறை அலுவலர்கள் கன்னியம்மாள், பகவதி, பத்மா, பெரியசாமி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் அலெக்ஸ், ஜேம்ஸ், மாவட்ட சமூக நலத்துறை அலுவலக கண்காணிப்பாளர் ஹேமலதா, பாதுகாப்பு அலுவலர் செல்வமெர்சி, உதவியாளர் சுபத்ரா, மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன் உள்பட அரசு அலுவலர்கள், பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story