பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூரில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்
காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும், மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் காலை சிற்றுண்டி உணவு வழங்குவதை கைவிட்டு சத்துணவு மையங்களில் சத்துணவு ஊழியர்கள் மூலமாக வழங்க வேண்டும், மாதாந்திர ஓய்வூதியம் 6,750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும், 10 வருடம் பணி முடித்த சத்துணவு ஊழியர்களுக்கு கல்வி தகுதி அடிப்படையில் அரசின் அனைத்து துறை காலி பணியிடங்களில் 50 சதவீதம் முன்னுரிமை அளிக்க வேண்டும், ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த வேண்டும், மகப்பேறு விடுப்பு 12 மாதமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பணியாளர்கள் கருப்பு உடை அணிந்து நேற்று மாலை திருவள்ளூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சத்துணவு ஊழியர்கள் வந்து கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story