புவனகிரி அருகேஅதிகளவு மாத்திரை சாப்பிட்டு நர்சிங் மாணவி தற்கொலைபெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு
புவனகிரி அருகே பெற்றோர் கண்டித்ததால் அதிகளவு மாத்திரை சாப்பிட்டு நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
புவனகிரி,
வீட்டு வேலை செய்யாததால் கண்டிப்பு
புவனகிரி அருகே உள்ள ஆதிவராகநத்தம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சங்கர். விவசாயி. இவருடைய மகள் சுவாதி(வயது 18). இவர் குறிஞ்சிப்பாடியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு டிப்ளமோ நர்சிங் படித்து வந்தார். இவர் வீட்டு வேலை செய்யாமல் இருந்ததால் பெற்றோர் கண்டித்தனர்.
இதனால் மனமுடைந்த சுவாதி, வீட்டில் இருந்த தூக்க மாத்திரையை அதிக அளவில் சாப்பிட்டதாக தெரிகிறது. சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை, பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர்.
சிகிச்சை பலனின்றி சாவு
அங்கு சிகிச்சையில் இருந்த சுவாதி தன்னிச்சையாக மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்தார். பின்னர் மீண்டும் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனே அவர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன்னிறி சுவாதி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சங்கர் கொடுத்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.