செவிலியர்கள் கண்களில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம்

செவிலியர்கள் கண்களில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Jan 2023 1:00 AM IST (Updated: 11 Jan 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் கண்களில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாமக்கல்

பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் கண்களில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் கொரோனா கால மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் பணி அமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் கண்களில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்க நிர்வாகி பாக்கியலட்சுமி தலைமை தாங்கினார். நிர்வாகி பிரியா முன்னிலை வகித்தார்.

கோரிக்கைகள்

இதில் கொரோனா காலத்தில் ஒப்பந்த செவிலியர்களாக பணியாற்ற வாய்ப்பு அளித்ததை போல, நிரந்தரமாக ஒப்பந்த பணி வழங்க கோரி செவிலியர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் தற்காலிகமாக மாற்றுப்பணி வழங்கும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஒப்பந்த அடிப்படையில் நிரந்தரப்பணி வழங்கவும் கோரிக்கை விடுத்தனர்.

Next Story