ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி


ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி
x
தினத்தந்தி 25 April 2023 12:15 AM IST (Updated: 25 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடத்தில் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி நடந்தது

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் துளசேந்திரபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், வட்டார அளவிலான தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்புகள் நடந்தது. பயிற்சியில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டங்கள், நடனவழி கல்வி மற்றும் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பாடத்திட்டங்களை எவ்வாறு கற்றுத் தருவது என்பன உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதில் குருக்கத்தி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் காமராஜ், வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி, தலைமை ஆசிரியர் பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் செயல் விளக்கப் பயிற்சி அளித்தனர். பயிற்சியில் கொள்ளிடம் வட்டாரத்தை சேர்ந்த இதில் 100-க்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் பயிற்றுனர் ஐசக் ஞானராஜ் நன்றி கூறினார்.


Next Story