நாகர்கோவிலில் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி


நாகர்கோவிலில் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி
x

நாகர்கோவிலில் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்

நாகர்கோவிலில் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி

அகஸ்தீஸ்வரம் வட்டார வள மையத்திற்குட்பட்ட 92 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் 2-ம் பருவத்திற்கான எண்ணும், எழுத்தும் பயிற்சி நாகர்கோவிலில் கோட்டார் கவிமணி தொடக்கப்பள்ளி, டதி மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 இடங்களில் நடந்தது. இந்த பயிற்சி நாளை (புதன்கிழமை) வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் மொத்தம் 352 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தமிழ், ஆங்கிலம், கணித பாடத்தில் நடைபெறும் பயிற்சியை மாவட்ட கல்வி அலுவலர் (பயிற்சி) ஷெர்லின் விமல் தொடங்கி வைத்தார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் துரைராஜ், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மலர்விழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த பயிற்சியை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மேற்பார்வையாளர்கள் ஆகியோர் நடத்துகிறார்கள்.


Next Story