சுகாதாரம் இன்றி இயங்கிய 2 ஓட்டல்களுக்கு நோட்டீஸ்
சுகாதாரம் இன்றி இயங்கிய 2 ஓட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகள் சுகாதாரமான முறையில் செயல்படுகிறதா என்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி உணவு பாதுகாப்புத்துறையினருக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராஜேஷ், சிவமணி ஆகியோர் நேற்று முன்தினம் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 45 ஓட்டல்கள், பேக்கரிகளில் ஆய்வு செய்தனர்.
அதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய 2 கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சுகாதாரம் இன்றி இயங்கிய 2 ஓட்டல்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டது.
அப்போது ''ஓட்டல்கள், பேக்கரியில் தயாரிக்கப்படும் அனைத்து உணவு பொருட்களும் சுகாதார முறையில் சுத்தமான குடிநீரில் தயார் செய்ய வேண்டும். மோர், சட்னி வகைகளை சுத்தமான குடிநீரில் தரமாக தயார் செய்ய வேண்டும்'' என்று உரிமையாளர்களிடம் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.