'புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம் என்பது நியாயமில்லை' - சபாநாயகர் அப்பாவு


புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம் என்பது நியாயமில்லை - சபாநாயகர் அப்பாவு
x

புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம் என்று கூறுவது நியாயமில்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

நெல்லை,

நெல்லையில் சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"புதிய கல்விக் கொள்கையை மாநில அரசு ஏற்றுக்கொண்டால்தான் நாங்கள் நிதி தருவோம் என்று மத்திய அரசு கூறுவது நியாயமில்லை. அது மக்களின் வரிப்பணம். புதிய கல்விக் கொள்கையை ஏற்பதும், ஏற்காததும் இதற்கு தடையாக இருக்கக் கூடாது.

புதிய கல்விக் கொள்கையில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. அது குலக்கல்வி திட்டத்தை அடிப்படையாக கொண்டிருக்கிறது. அதனால் நாங்கள் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம்."

இவ்வாறு சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.


Next Story