வடகிழக்கு பருவமழை அக்டோபர் 4-வது வாரத்தில் துவங்க வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 4-வது வாரத்தில் துவங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 01 ஆம் தேதி முதல் செப்டெம்பர் 30 ஆம் தேதி வரை தென்மேற்கு பருவமழை காலம் எனவும், அக்டோபர் 01 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை காலம் எனவும் கணக்கிடப்படுகிறது.
அதன் படி இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 4-வது வாரத்தில் துவங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தற்போதைய கணினி மாதிரி கணிப்பின் அடிப்படையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 4-வது வாரத்தில் துவங்க வாய்ப்பு உள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story