வடமாநில வாலிபர் தற்கொலை
சிவகிரியில் வடமாநில வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி
சிவகிரி:
மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் நிர்மல் மண்டல். இவருடைய மனைவி மற்றும் மகன்கள் சிவகிரியில் உள்ள செங்கல் சூளையில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் நிர்மல் மண்டலின் மகன் நபகுமார் மண்டல் (வயது 18) என்பவர் வேலைக்கு செல்லவில்லை. இதனை அவரது தாய் பிரமிளா மண்டல் கண்டித்தார்.
இதனால் மனம் வெறுப்பு அடைந்த நபகுமார் மண்டல் நேற்று முன்தினம் இரவு செங்கல் சூளை அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். நபகுமார் மண்டல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story