வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: சென்னையில் சாலை சீரமைப்பு பணிகள் துரிதம்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாலைகள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை சென்னை மாநகராட்சி நிர்வாகம் துரிதப்படுத்தியுள்ளது.
சென்னை,
வடகிழக்கு பருவமழை இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ளது. இதையொட்டி, சென்னை மாநகராட்சி சார்பில், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், மழை நீர் வடிகால் அமைக்கும் பணி, சாலைகள் மறுசீரமைக்கும் பணி, சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மற்றும் சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை ஜாபர்கான்பேட்டையில் இந்த பணிகளை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் தினசரியும் 20 கிலோமீட்டர் புதிய சாலை அமைக்கப்படுவதாக கூறினார். 37 இடங்கள் மட்டுமே வெள்ள நீர் தேங்கும் பகுதியாக கண்டறியப்பட்டு, அங்கு மாற்று வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Related Tags :
Next Story