விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பிரசாரம்
விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
திருவாரூர்
தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பிரசாரம் மன்னார்குடியில் நடந்தது. அப்போது மன்னார்குடி பெரிய கடைத்தெரு, காஞ்சி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தீயணைப்பு வீரர்கள் பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட துண்டு பிரசுரங்களை வழங்கினர். நிகழ்ச்சியை மாவட்ட தீயணைப்பு அலுவலர் வடிவேலு தொடங்கி வைத்தார். உதவி அலுவலர் இளஞ்செழியன், மன்னார்குடி நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியன், நிலைய போக்குவரத்து அலுவலர் கேசவன், சிறப்பு நிலைய அலுவலர் சம்பத்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story