அரசியலை பொறுத்தவரை யாரும் நண்பர்கள் இல்லை" - அண்ணாமலை பேட்டி


அரசியலை பொறுத்தவரை யாரும் நண்பர்கள் இல்லை - அண்ணாமலை பேட்டி
x
தினத்தந்தி 23 March 2023 2:05 PM IST (Updated: 23 March 2023 2:20 PM IST)
t-max-icont-min-icon

அரசியலில் நிரந்தரமான நண்பர்களும் கிடையாது, நிரந்தரமான எதிரிகளும் கிடையாது என தமிழக பாஜக தலைவர் அன்னாமலை கூறினார்.

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எப்படி இருக்கிறது என்றால் நடிகர் வடிவேல் நடித்த 23ம் புலிகேசி படம் தான் நினைவுக்கு வருகிறது. முதலமைச்சர் தினமும் சமூக வலைதளத்தில் யார் தவறாக பேசுகின்றனர் என கேட்டு அதிகாலையில் கைது செய்வதில் தான் அரசு முனைப்பு காட்டுகிறது.

பெண்கள், குழந்தைகள் மீது வன்மத்தை காட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகமாக தான் இருக்கிறது.

2021 ஆண்டை விட 2022ம் ஆண்டு முதல் அதிகரித்து விட்டது. அரவக்குறிச்சி தொகுதியில் செலவு செய்தது குறித்து அரசு உளவுத்துறை, 70 ஆயிரம் போலீசார் கர்நாடகவிற்கு அனுப்பட்டும். ஆட்சியே அவர்களிடம் இருக்கும் போது நான் என்ன பதில் சொல்ல வேண்டி உள்ளது.

வருவாய் துறை அதிகாரிகள், ஆட்சியர், உளவுத் துறை உள்பட முழு அரசு அதிகாரிகளை அண்ணாமலை மீது ஏவி விட்டு சொத்து எவ்வளவு, எவ்வளவு சம்பாதித்தான், கர்நாடகவில் 9 ஆண்டுகள் பணியில் இருந்த போது ஒரு பைசா லஞ்சம் வாங்கினானா என்பதை தேடி பிடித்து வந்து சொல்ல சொன்னால் அதற்கு பதிலளிக்க தயாராக இருக்கிறேன்.

கூட்டணி கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்வதை நல்லதாக பார்க்கிறேன். பா.ஜ.க. வளர்ச்சியை ரசிக்க விரும்பவில்லை என்பதை பார்க்கிறேன். கூட்டணி கட்சியாக யாராக இருந்தாலும் பா.ஜ.க.வை வளர்க்க வேண்டும் என நினைத்தால் முட்டாள்கள். அரசியலை பொறுத்த வரை யாரும் நண்பர்கள் அல்ல.

இதை எப்போ புரிந்து கொள்கிறோமோ அப்போது தான் பா.ஜ.க. வளர்ச்சி. அரசியலில் நிரந்தரமான நண்பர்களும் கிடையாது. நிரந்தரமான எதிரிகளும் கிடையாது. தனித்து போட்டியிடுவது என்பது எங்களுக்கும் தமிழக மக்களுக்கும் இடையே உள்ள பிரச்சினை. உங்கள் கடையை திறக்க நான் ஆள் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story