எந்த சின்னம் கொடுத்தாலும் பிரச்சினையில்லை.. வெற்றி பெறுவோம் - சீமான்


எந்த சின்னம் கொடுத்தாலும் பிரச்சினையில்லை.. வெற்றி பெறுவோம் - சீமான்
x

எங்களுடைய சின்னத்தை வேறு ஒருவருக்கு கொடுத்துவிட்டார்கள் என சீமான் பேசினார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அந்த கட்சியின் தலைவர் சீமான் மேல்முறையீடு செய்தார்.

இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்துவரும் நிலையில், கரும்பு விவசாயி சின்னம் கோரும் நாம் தமிழர் கட்சியின் மேல்முறையீட்டு மனுவுக்கு ஏப்ரல் 1-ந் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கும், பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கும் உத்தரவிட்டது.

இந்நிலையில் சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

"எங்களுடைய சின்னத்தை வேறு ஒருவருக்கு கொடுத்துவிட்டார்கள். மாற்றாக விவசாயத்தை முன்வைத்து ஒரு சின்னம் கேட்டால் அதையும் வேறு ஒருவருக்கு கொடுத்து விடுகிறார்கள்.

ஒரு கட்சியை தேசிய கட்சியாக எதனை அடிப்படையாக வைத்து தேர்தல் ஆணையம் முடிவு செய்கிறது.. எதனை வைத்து மதிப்பீடு செய்கிறது. எங்களது கட்சியை வேறு ஒருவருக்குக்கு கொடுத்துள்ளீர்களே.. அவர்கள் வேறு எந்த மாநிலத்திலாவது போட்டியிட்டுள்ளாரா.. உரிய வாக்குகளை பெற்று அங்கீகாரம் பெற்றுள்ளாரா..

தமிழகத்தில் மூன்று கூட்டணி உள்ளது. ஒரே ஒரு கட்சி மட்டும்தான் தனி அணி. அவர்கள் எல்லாரும் என்னை குறிவைப்பார்கள். ஆனால் நான்தான் எல்லாரையும் ஒரே நேரத்தில் குறிவைக்கிறேன். எட்டு கோடி மக்களுடன் கூட்டணி. நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னம் கொடுத்தாலும் பிரச்சனையில்லை, வெற்றி பெறுவோம்." இவ்வாறு அவர் கூறினார்.


Next Story