ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கிடைக்காது: பா.ஜ.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் -கே.எஸ்.அழகிரி அறிக்கை
ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கிடைக்காது: பா.ஜ.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் கே.எஸ்.அழகிரி அறிக்கை.
சென்னை,
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சுப்ரீம் கோர்ட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் தமிழக பா.ஜ.க. தலைவர், தமிழக அமைச்சராக இருக்கிற செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்காது என்று கூறுவது, நீதிமன்ற நடைமுறையில் தலையிடுவது மிகப்பெரிய குற்றமாகும். இத்தகைய குற்றத்தை அண்ணாமலை செய்திருக்கிறார்.
இவருக்குச் சட்டம் என்ன தண்டனை கொடுக்கிறதோஇல்லையோ, தமிழக மக்கள் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழக பா.ஜ.க.வுக்கு ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கிடைக்காத நிலையை ஏற்படுத்தி உரிய பாடத்தைப் புகட்டுவார்கள் என்பது உறுதி. இந்தியாவிலேயே ஒரு மாநிலத்தில் ஓர் இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் டெபாசிட் இழந்து அண்ணாமலையின் அரசியலால் தமிழக பா.ஜ.க. மிகப்பெரிய விலையைத் தரப்போவது காலத்தின் கட்டாயமாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.