பாம்பனில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
பாம்பனில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
ராமநாதபுரம்
ராமேசுவரம்
தென்மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது வலுவடைந்ததாக வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இலங்கை திரிகோணமலையில் இருந்து கிழக்கே 420 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து 600 கிலோமீட்டர் தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு வலுவடைந்து வரும் நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதன் காரணமாக 4-வது நாளாக மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை காரணமாக, ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி பகுதியில் மட்டும் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் அதிகமான நாட்டுப் படகுகள் மற்றும் பைபர் படகுகள் கரையோர கடல் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
Related Tags :
Next Story