என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து அன்புமணி ராமதாஸ் 2-வது நாளாக நடைபயணம்
என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் 2-வது நாளாக நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
கடலூர்,
என்.எல்.சி. நிர்வாகம் கடலூர் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோஷத்துடன் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைபயணத்தை வடலூரை அடுத்த வானதிராயபுரத்தில் நேற்று தொடங்கினார். தொடர்ந்து தென்குத்து, வடலூர், மந்தாரக்குப்பம், வடக்கு வெள்ளூர், அம்மேரி, தொப்பிளிக்கும் வழியாக ஆதண்டார்கொல்லையில் தனது முதல் நாள் நடைபயணத்தை அன்புமணி ராமதாஸ் முடித்தார்.
இதைத் தொடர்ந்து 2-வது நாளாக இன்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தனது நடைபயணத்தை மேல்வளையமாதேவி கிராமத்தில் இன்று நண்பகல் 12.30 மணிக்கு தொடங்கினார். இதைத் தொடர்ந்து கீழ்வளையமாதேவி, கரிவெட்டி ஆகிய கிராமங்கள் வழியாக சென்று மும்முடிச்சோழகன் கிராமத்தில் நிறைவு செய்கிறார்.
இந்த நடைபயணத்தில் பா.ம.க. நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story