பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம்
நெல்லை சித்த மருத்துவ கல்லூரியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
திருநெல்வேலி
பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை சித்த மருத்துவ கல்லூரியில் அரசின் வழிகாட்டுதலின்பேரில் மழைகால தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, தொற்றுநோய் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் மருத்துவக்கல்லூரி திருமூலர் மாளிகையில் வைத்து நடத்தப்பட்டு வருகிறது.
முகாமை சித்த மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் மனோகரன் தொடங்கி வைத்தார். உறைவிட மருத்துவர் ராமசாமி, பேராசிரியர் கோமளவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தினந்தோறும் காலை 8 மணி முதல் 11 மணி வரை முகாம் நடத்தப்படுகிறது. இதில் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதற்கான ஏற்பாடுகளை டாக்டர் உமா கல்யாணி செய்திருந்தார்.
Related Tags :
Next Story