திருத்துறைப்பூண்டி, திருவாரூர் வழியாக சென்னைக்கு இரவு நேர ரெயில் இயக்க வேண்டும்
காரைக்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி,திருவாரூர் வழியாக சென்னைக்கு இரவு நேர ரெயிலை இயக்க வேண்டும் என்று அரசுக்கு மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருத்துறைப்பூண்டி;
காரைக்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி, திருவாரூர் வழியாக சென்னைக்கு இரவு நேர ரெயிலை இயக்க வேண்டும் என்று அரசுக்கு மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னைக்கு ரெயில் வசதி
காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக தினசரி இயக்கப்பட்டு வந்த கம்பன் எக்ஸ்பிரஸ் விரைவு ெரயில் மற்றும் ராமேஸ்வரத்தில் இருந்து தினசரி இயக்கப்பட்டு வந்த சேது எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் ஆகிய ரெயில்கள் மீட்டர்கேஜ் பாதையை அகலப்பாதையாக மாற்றும் பணி காரணமாக தற்போது காரைக்காலில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.தற்போது மத்திய அரசு ரூ.1500 கோடி செலவு செய்து காரைக்குடி ெரயில் பாதையை அகலப்பாதையாக மேம்படுத்தி உள்ளது.இந்த பாதையில் இதுவரை சென்னைக்கு தினசரி ெரயில்கள் இயக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தினசரி ெரயிலை அனுமதிக்காமல் ெரயில்வே நிர்வாகம் வாரத்துக்கு 3 நாள் மட்டும் தாம்பரத்திலிருந்து செங்கோட்டை வரைக்கும் ெரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆன்மிக சுற்றுலா தலங்கள்
திருத்துறைப்பூண்டியில் இருந்து வேதாரண்யம் அகஸ்தியன்பள்ளிக்கு ரெயில் பாதைகள் அமைக்கும் பணி நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இதில் நாகப்பட்டினம்- திருத்துறைப்பூண்டி ெரயில்வே பணிகள் இன்னும் நிறைவு பெறாமல் பாதியிலேயே நிற்கி்றது. அதிக வருமானம் ஈட்டி தரக்கூடிய ெரயில் தடமாக இப்பகுதி விளங்குகிறது. மேலும் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் இந்த பகுதியில்தான் அதிகமாக உள்ளது. இதனால் ஆன்மிக சுற்றுலா பயணிகள் அதிக அளவில் இங்கு வந்து செல்வதால் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் இந்த பகுதி விளங்கி வருகிறது.
பறவைகள் சரணாலயம்
முத்துப்பேட்டை லகூன் அலையாத்தி காடுகள், உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயமும் இந்த பகுதியில் தான் உள்ளது. எனவே மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்தி காரைக்குடி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக சென்னைக்கு தினசரி இரவு நேர ரெயிலை இயக்க வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து திருவாரூர் மாவட்ட ெரயில் உபயோகிப்பாளர்கள் சங்க செயலாளர் மணிமாறன். ரெயில்வே உயர் அதிகாாிகளுக்கு மனு அனுப்பி உள்ளார்.