இரவு நேர ரோந்து பணி - காவலர்களை ஊக்குவிக்க சிறப்பு அரசாணை
காவல்துறையில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு 300 ரூபாய் சிறப்பு படி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,
காவல்துறையில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரையிலான அதிகாரிகளுக்கு 300 ரூபாய் சிறப்பு படி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறையில் பணியாற்றும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் மாதத்திற்கு 6 முதல் 10 நாட்கள் வரை இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இரவு ரோந்து பணிக்கு செல்லும் அனைத்து இரண்டாம் காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரையிலான அதிகாரிகளை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு சிறப்பு படியாக மாதம் 300 ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இதற்காக 42 கோடியே 22 ஆயிரத்து 800 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story