கோவை கார் ெவடிப்பு சம்பவம் தொடர்பாக 3 பேரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை


கோவை கார் ெவடிப்பு சம்பவம் தொடர்பாக 3 பேரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை
x

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலையில் நேற்று 3 பேரிடம் என்.ஐ.ஏ.அதிகாரிகள் 10½ மணி நேரத்திற்கு மேல் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

திருவண்ணாமலை

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலையில் நேற்று 3 பேரிடம் என்.ஐ.ஏ.அதிகாரிகள் 10½ மணி நேரத்திற்கு மேல் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கோவை கார் வெடிப்பு சம்பவம்

கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த கார் வெடிப்பு சம்பவம் என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை செய்து அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

அதன் ஒரு பகுதியாக 7 பேர் கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று முன்தினம் திருவண்ணாமலையில் முகாமிட்டனர். அப்போது கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களிடம் செல்போனில் இருந்த எண்களை வைத்து திருவண்ணாமலை நல்லவன் பாளையத்தை சேர்ந்த 3 பேர் வீடுகளுக்கு நேற்று அதிகாலையில் நேரில் சென்று சோதனை நடத்தினர்.

வீட்டில் நடத்தப்பட்ட சோதனை முடிவடைந்த பின்னர் அவர்கள் 3 பேரையும் காலை 8 மணியளவில் திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் அழைத்து வந்து தீவிர விசாரணையை தொடங்கினர்.

அதிகாரிகள் தீவிர விசாரணை

விசாரணையில் அவர்கள் 3 பேரும் பயன்படுத்திய 8 ஆண்ட்ராய்டு செல்போன்கள், 3 மடிக்கணினிகள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதன பொருட்களை பறிமுதல் செய்தனர்.

அப்போது செல்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் உள்ள அழிக்கப்பட்ட பதிவுகளை மீட்டெத்து அதில் உள்ள அனைத்து விவரங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவர்கள் பதிவு செய்து கொண்டனர். மாலை 6.30 மணியளவில் விசாரணை முடித்த பின்னர் அதிகாரிகள் 2 கார்களில் ஏறி மின்னல் வேகத்தில் கிளம்பி சென்றனர்.

விசாரணை காலை 8 மணி முதல் மாலை 6.30 மணி என சுமார் 10 ½ மணி நேரத்திற்கு தாலுகா போலீஸ் நிலையத்தில் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story