ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் வாலிபர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனையால் பரபரப்பு


ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் வாலிபர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனையால் பரபரப்பு
x
தினத்தந்தி 1 Sept 2023 12:45 AM IST (Updated: 1 Sept 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் வாலிபர் ஒருவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் வாலிபர் ஒருவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.

வாலிபர் வீட்டில் சோதனை

ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தை சேர்ந்தவர், செய்யது யூசுப் (வயது 30). இவரது வீட்டில், சோதனை நடத்த தேசிய புலனாய்வு முகமையை (என்.ஐ.ஏ.) சேர்ந்த 4 அதிகாரிகள் நேற்று காலை 6 மணிக்கு வந்தனர்.

அவரது வீட்டில் பல்வேறு இடங்களில் தீவிரமாக சோதனை செய்தனர். செய்யது யூசுப்பிடமும் விசாரணை நடத்தினார்கள். காலை 6 மணியில் இருந்து 9 மணி வரை இந்த சோதனை நடைபெற்றது.

அப்போது, ராமேசுவரம் போலீஸ் துணை சூப்பிரண்டு உமாதேவி தலைமையில் அவரது வீட்டின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததுடன் அந்த தெருவிலும் போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர்.

காரணம் என்ன?

இதுதொடர்பாக போலீசார் கூறியதாவது:- செய்யது யூசுப் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்துள்ளார். அப்போது தடை செய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்த சிலர், அந்த இயக்கங்களில் சேருவது குறித்து இவருடன் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அந்த தகவலின் அடிப்படையில் இவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். இது குறித்து மேலும் விசாரணை நடத்துவதற்காக வருகிற 5-ந் தேதி அன்று தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் கொடுக்க வேண்டும் என்றும் செய்யது யூசுப்பிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் அவரது வீட்டில் இருந்து எந்த ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதா? என தங்களுக்கு தெரியவில்லை.

இவ்வாறு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த திடீர் சோதனை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story