செய்திகள் சில வரிகளில்......


செய்திகள் சில வரிகளில்......
x
தினத்தந்தி 29 Sept 2024 6:00 PM IST (Updated: 29 Sept 2024 6:00 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

சென்னை,

* துணை முதல்-அமைச்சர் என்பது பதவியல்ல, பொறுப்பு என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

* செந்தில் பாலாஜி உட்பட 4 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

* மழைக்காலத்தில் தண்ணீரை சேமியுங்கள் என 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.

* ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை கண்டித்து பட்காம் மற்றும் ஸ்ரீநகரில் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது.

* இஸ்ரேல் மீண்டும் லெபனான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்த தாக்குதலில் 33 பேர் கொல்லப்பட்டனர், 195 பேர் காயமடைந்தனர்.

* டெல்லியில் முடங்கிய திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை மந்திரிகளுடன் முதல்-மந்திரி அதிஷி ஆலோசனை நடத்தினார்.

* எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

* நேபாளத்தில் கனமழையை தொடர்ந்து பயங்கர நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 112-ஆக உயர்ந்துள்ளது.

* ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா மரணம் அடைந்தது வரலாற்றுத் திருப்புமுனை என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார்.

* நியூசிலாந்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.

* பாண்டியர்கள் உலக அளவில் சிறந்த வணிகர்களாக திகழ்ந்துள்ளனர் என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.


Next Story