செய்திகள் சில வரிகளில்......


செய்திகள் சில வரிகளில்......
x

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

சென்னை,

* ஜம்மு காஷ்மீரில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசாரம் செய்தால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாக சென்று தமிழகத்துக்கு ரூ.7,616 கோடி முதலீட்டுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்.

* பா.ஜ.க.வால் மட்டுமே ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க முடியும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

* மெட்ரோ ரயில் நிதி, கல்வி நிதி விவகாரம் தொடர்பாக பிரதமரை நேரில் சந்திக்க உள்ளேன் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

* டாக்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் தயவு செய்து பணிக்கு திரும்புங்கள் என்றும் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்தார்.

* முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள மக்களுக்கு ஓணம் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

* ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கியில் பாகிஸ்தானை வீழ்த்தி லீக் சுற்றை தோல்வியே சந்திக்காமல் இந்தியா நிறைவு செய்தது.

* சம்ரான்-1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

* அமெரிக்கர்கள் குறைவான தீமையை தேர்வு செய்ய வேண்டும் என்று டிரம்ப்-கமலா ஹாரிஸ் குறித்து போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.

* ஜம்மு-காஷ்மீர்: பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

* வியட்நாமில் யாகி புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 254 ஆக உயர்ந்துள்ளது.


Next Story