செய்திகள் சில வரிகளில்......


செய்திகள் சில வரிகளில்......
x

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

சென்னை,

* சி.பி.ஐ. கைது செய்த வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளது.

* ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவிகள் அளிக்க கூடாது என்று புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

* சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் காங். தலைவர் ஜெகதீஷ் டைட்லர் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

* சென்னையில் போர்டு தொழிற்சாலையை மீண்டும் இயக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

* மம்தா பானர்ஜி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் இனி பங்கேற்கப் போவதில்லை என்று மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் தெரிவித்துள்ளார்.

* பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து 24-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

* நேர்மையான தலைவரை சிறையில் அடைத்ததற்காக நாட்டு மக்களிடம் பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

* வியட்நாமில் மட்டும் யாகி புயல் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 226-ஆக அதிகரித்துள்ளது.

* விமர்சனங்களை மீறி பார்முலா-4 கார் பந்தயம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

* ஜிஎஸ்டி பற்றி கோரிக்கை வைத்த கோவை தொழிலதிபர் அவமதிக்கப்பட்டிருக்கிறார் என்று ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.


Next Story