செய்திகள் சில வரிகளில்......
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.
சென்னை,
* வியட்நாமில் யாகி புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 141 ஆக உயர்ந்துள்ளது.
* தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி உள்ளனர்.
* தமிழகத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவது பற்றி போர்டு கார் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
* ஆசிய சுற்றுப்பயணத்தின் இறுதிக் கட்டமாக போப் பிரான்சிஸ் சிங்கப்பூர் சென்றுள்ளார்.
* காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியதில் பி.எஸ்.எப். வீரர் ஒருவர் காயமடைந்து உள்ளார்.
* பாஜக இருக்கும் வரை யாராலும் இடஒதுக்கீட்டை ரத்து செய்யவோ, தேசத்தின் பாதுகாப்பில் குழப்பம் ஏற்படுத்தவோ முடியாது என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
* சிறுபான்மையினர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என எஸ்டிபிஐ மாநில தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
* ராகுல் காந்தி தனது அமெரிக்க பயணத்தின் போது இந்தியாவிற்கு எதிராக விஷத்தை கக்குவதாக பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
* ஜுலானா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
* ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி வென்றால் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.25 லட்சம் மருத்துவ காப்பீடு மற்றும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.